மழை அதிகமாகவே வாய்ப்புள்ளது, 10 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை. !
வானிலை
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
குறிப்பாக சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. எனவே, இன்று வெளியே செல்ல பிளான் செய்வோர் அதற்கேற்பத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நிலையில், தமிழகத்தில் பரவலாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை உட்பட பல வடமாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெப்பம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதற்கிடையே வரும் நாட்களிலும் இந்த மழை தொடரும் என்றே வானிலை மையம் கூறியுள்ளது.
மொந்தா புயல்
மேலும், இப்போது மொந்தா புயலும் (Montha) உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் வரும் நாட்களில் மழை தொடரும் என்றே கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நாளைய தினம் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் மற்றும் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரம் மழை
இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குப் பல்வேறு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குப் பல்வேறு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இரவு 7 மணி வரை ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாகச் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் இதனால் டிராபிக் பாதிப்பும் கூட ஏற்படும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "நாளைய தினம் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 28ம் தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
