காணாமல் போன இளைஞரை கொன்று எரித்த கொலையாளிகள் மூவர் கைது.!

மேட்டுப்பாளையம்

காணாமல் போன இளைஞரை கொன்று எரித்த கொலையாளிகள் மூவர் கைது.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுமையா. இவரது கணவர் அலாவுதீன் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கார் ஸ்டாண்டில் கார் ஓட்டி வருவதாகவும் கணவர் கடந்த 14/04/2024-ம் தேதி சுமார் 12.00 மணி அளவில் மேட்டுப்பாளையம் பஸ் நிலைய கார் ஸ்டாண்ட் போவதாக சொல்லி விட்டு சென்றவர் தற்பொழுது வரை வரவில்லை எனவும்  கணவரை கண்டுபிடித்து தருமாறு கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணையில் அலாவுதீனுக்கு பூஜா என்ற பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக தகவல் தெரிய வந்ததன் பேரில் பூஜா, கணவர் சரண்குமார்  மற்றும் அண்ணன் மணிகண்டன் அப்பா ரவிக்குமார் ஆகியோர்களை காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் சரண்குமார் மற்றும் அவரது அண்ணன்  மணிகண்டன்  அப்பா ரவிக்குமார் ஆகிய மூவரும் காணாமல் போன அன்று 14.04.2024 ஆம் தேதி இரவு அலாவுதீனுக்கும் பூஜாவின் கணவருக்கும் போனில் வாக்கு வாதம் நடந்துள்ளது.

வாக்கு வாதத்தில் கோபமடைந்த அலாவு தீன் பூஜாவின் கணவர் சரண்குமாரின் வீட்டிற்கு வந்து தகராறு செய்ததால் அப்பா மற்றும் மகன்கள் இருவரும் சேர்ந்து  அலாவுதீனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

           கொலை செய்யப்பட்ட அலாவுதீன் 

கொலை செய்தது வெளியே தெரியாமலிருக்க உடலை காரமடை ரோடு குட்டையூர் மாதேஸ்வரன் கோயில் பின்புறம் உள்ள காலி இடத்தில் வைத்து எரித்து விட்டதாக மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேட்டுப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சின்னக் காமனன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதால் சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன் நடந்த கொலை சம்பவத்தை கண்டறிந்து மூவரையும் கொலை மற்றும் தடையங்களை அழிக்க முயன்ற வழக்கு என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தந்தை மற்றும் மகன்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் ( Rafi MR )