சிறுமுகை வனப்பகுதியில் அடையாளம் தெரியாத பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை. !

சிறுமுகை

சிறுமுகை  வனப்பகுதியில் அடையாளம் தெரியாத பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை. !

சிறுமுகை அடுத்துள்ள பெத்திக்குட்டை வனப்பகுதியில் வனத்துறையினர் களைச் செடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத பிணம் இருப்பதை பார்த்து காவல்துறைக்கு கொடுத்தனர்.

தகவலின் பெயரில் சிறுமுகை காவல்துறையினர் மற்றும் தடைய அறிவியல் துறையினர் மேற்படி இடத்திற்கு சென்று பார்த்த போது அடையாளம் தெரியாது அழுகி காய்ந்த நிலையில் ஆணா பெண்ணா என்பது கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்த பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுமுகை காவவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இறந்தவர் யார் என கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.