காவேரிப்பட்டிணத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி  சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் .!

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டிணத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி  சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் .!

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி  சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டிணம் துணை கிளை, கிருஷ்ணகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து காவேரிப்பட்டிணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நபர்களை கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

முகாமிற்கான ஏற்பாடுகளை ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் நா.செந்தில்குமார், காவேரிப்பட்டிணம் துணைக் கிளை செயலாளர் து.சண்முகம், செ.சேஷகிரி உள்ளிட்டார் செய்திருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ