கும்பகோணம் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் இடுக்காட்டுக்கு செல்லும் பாதை திடீரென அடைப்பு..!
தஞ்சாவூர்

கும்பகோணம் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் இடுக்காட்டுக்கு செல்லும் பாதை திடீரென அடைப்பு..!
இறந்தவர் உடலை தேசிய நெடுஞ்சாலையின் நடுவே வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்..
கும்பகோணம் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் இடுகாட்டிற்கு செல்லும் பாதையை அடைத்ததால் கிராம மக்கள் இறந்தவர் உடலை தேசிய நெடுஞ்சாலையில் நடுவே வைத்து கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகரமாங்டுடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர்கள் அங்கு இறப்பவர்களை கும்பகோணம் - விக்கிரவாண்டி நெடுஞ்சாலையின் வடக்கு புறத்தில் உள்ள ஈடுகாட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த பாதையை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சாலையின் குறுக்கே உள்ள பாதையை தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் திடீரென அடைத்தனர்.
இந்த நிலையில மாதா கோவில் தெருவை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். இதனை கொண்டு செல்வதற்கு பாதை அடைக்கப்பட்டதால் இந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் இறந்தவர் உடலை வண்டியில் ஏற்றி சாலையின் குறுக்கே நிறுத்தி திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர்
இதனால் இந்த பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேலு, வட்டாட்சியர் பழனிவேல் மற்றும் அரசு அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இறந்தவரின் பிணத்தை எடுத்து அடக்கம் செய்தனர்.
சௌய்தியாளர்
பாபநாசம் இன்பம்