கரூர் சம்பவம் குறித்து தலைமை நீதிபதி தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று தவெக வேல்முருகன். !

கிருஷ்ணகிரி

கரூர் சம்பவம் குறித்து தலைமை நீதிபதி தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று தவெக வேல்முருகன். !

கரூர் சம்பவம் குறித்து தலைமை நீதிபதி தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது.....

தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியினரும் ரோட் ஷோ நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்று நீண்ட காலமாக தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தி வருகிறது. அரசியல் தலைவர் கூட்டத்திற்கு வரும் போது தொண்டர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கிட வேண்டும். 

தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் உரிய விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும். அப்பாவி மக்கள் 40 பேர் உயிரிழந்து உள்ளனர். இதற்கு முதல் குற்றவாளி விஜய். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேலாக நிகழ்ச்சிக்கு வந்ததால் இந்த சம்பவம் நடந்து உள்ளது. ஆனால் அவரை விட்டு மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது. 

தமிழக அரசு இந்த சம்பவத்தில் யார் தவறு செய்தாலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். தமிழக மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் கட்சியினரின் கூட்டத்திற்கு வரும் போது குழந்தைகளை அழைத்து வர கூடாது. பாதுகாப்பு மிகவும் முக்கியம். 

இளைஞர்கள் தங்களது வாழ்வை தொலைத்து நடிகர் பின்னால் செல்வதை தவிர்க்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லாமல், எந்த துக்க நிகழ்ச்சிக்கும் வராமல், திடீரென வாரத்திற்கு ஒருமுறை வெளியில் வருவதற்கு எதற்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். இது கண்டிக்கதக்கது. 

பொது மக்களை தங்களது சுய நலத்திற்காக வரவழைத்து இந்த சோகத்தை ஏற்படுத்தியது கண்டிக்க தக்கது என்று கூறினார்.

செய்தியாளர்

மாருதி மனோ