ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் மற்றும் கிராமத்தில் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலினை புணரமைக்கும் பணிகள் .!

கிருஷ்ணகிரி

ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் மற்றும் கிராமத்தில் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலினை புணரமைக்கும் பணிகள் .!

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் அருகே அத்திமுகம் அடுத்துள்ள மெனசானதொட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் மற்றும் கிராமத்தில் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலினை புணரமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து புதிதாக செய்யப்பட்டுள்ள முனீஸ்வரர் சுவாமி, கங்கம்மா சுவாமி மற்றும் மாரியம்மா சுவாமி ஆகிய உற்சவ தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர் கும்பாபிஷேக விழாவுக்கு வந்த அனைத்து பொதுமக்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக   அதிமுக துணைப் பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி எம்எல்ஏ, கலந்துகொண்டார்.

உடன்  சூளகிரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பாபு வெங்கடாசலம், ஒன்றிய பொருளாளர் நாராயணப்பா, அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் மஞ்சுநாத் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ