சந்தப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடை பெற்ற. " நேர்பட பேசு " உரையாடல் நிகழ்வு நடைபெற்றது..!
கிருஷ்ணகிரி

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சந்தப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடை பெற்ற. " நேர்பட பேசு " உரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
இன்னிகழ்ச்சியில் மறு சுழற்சி, கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், காடழிப்பு, காலநிலைப் பிறழ்வு, போன்ற மாணவர்கள் கேட்டிராத சொற்களில் உறைந்துள்ள எதிர்காலத்தை புரியும்படி சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
நேர்மறை சிந்தனையை உள்வாங்கி, வருங்கால சிக்கலுக்கு தீர்வு தேடும் திறன் வளர்த்து, நிலையான வாழ்வு நோக்கி , வகுப்பறைகளை முன் நகர்த்தும் இன்னிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்கள்.
செய்தியாளர்
மாருதி மனோ