சிமெண்ட்சாலை, சிறுபாலம், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை.!
கிருஷ்ணகிரி
5.11.2025 இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பையா என்கிற முனிவெங்கட்சாமி ஏற்பாட்டில், குருபராத்தப்பள்ளி நல்லகான கொத்தப்பள்ளி ஆகிய கிராமங்களில் சிமெண்ட்சாலை, சிறுபாலம், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை.

பூமி பூஜையின் போது கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் ஒய். பிரகாஷ் MLA, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, மாநில இளைஞரணி சீனிவாசன் மற்றும் மாநில, மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
