மத்திய அரசின் 125 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம். !

செங்கல்பட்டு

மத்திய அரசின் 125 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து  – செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்போரூரில் அ.இ.அ.தி.மு.க. கண்டன  ஆர்ப்பாட்டம்!

தி.மு.க.அரசை விளாசிய ஒன்றிய செயலாளர் தையூர் எஸ் குமரவேல்.!

மத்திய அரசு 125 நாள் வேலை திட்டம் உயர்த்தியதை திமுக அரசு சீர்குலைக்கிறது என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் தலைமையில் தோழமைக் கட்சிகள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், நடைபெற்றது.


நிகழ்ச்சியில் கண்டன உரையாற்றிய திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளரும் தையூர் ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்.குமரவேல் பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்ததாக தி.மு.க.வை விளாசி தள்ளினார் 

2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது 100 நாள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும்; பணியாளர்களின் சம்பளம் 300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும்; 100 நாள் வேலைத் திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.-வின் ஸ்டாலின் மாடல் அரசு, இதுவரை இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மாறாக, கடந்த 57 மாத கால திமுக ஆட்சியில், ஆண்டுக்கு சராசரியாக 40 நாட்கள்கூட வேலை வழங்கப்படவில்லை என்றும்; பணியாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் இந்தத் திட்டத்தில் திமுக-வினர் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.மத்திய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியதுடன், பணியாளர்களுக்கு நன்மை வழங்கும் வகையில் பல மாறுதல்களை செய்துள்ளன.
மாநில அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை.

மக்களுக்கான, 125 நாட்களாக உயர்த்தப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை, தங்களின் சொந்த நலனுக்காக சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டு, அப்பாவி ஏழை, எளிய மக்களின் நலனை கேள்விக்குறியாக்கும், நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான விடியா தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என தன் கண்டன உரையை நிறைவு செய்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தண்டரை மனோகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கோதண்டபாணி, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் லோ. ஏழுமலை,புரட்சி பாரதம் கட்சியின் ஆலை சிவலிங்கம், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மோகன்ராஜ், மற்றும் தோழமைக் கட்சியினர் திரளாய் பங்கு பெற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

செய்தியாளர்

   சுகுமாரன்