அருள்மிகு நடுபழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் விழா.!

கிருஷ்ணகிரி

அருள்மிகு நடுபழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் விழா.!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேவீரஹள்ளி கருமலை குன்றில் எழுத்தருளியுள்ள அருள்மிகு நடுபழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் விழாவினை முன்னிட்டு மாபெரும்  அன்னதானம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி  அருகே உள்ள தேவீரஹள்ளி கிராமத்தில்  கருமலை குன்றின் மீது எழுந்தருளியுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் 64-ம் ஆண்டு பங்குனி உத்திர தேர் திருவிழா கடந்த மாதம் 23-ம் தேதி கொடி ஏற்றுதலுடன் துவங்கிய இந்த திருவிழாவில் நாள்தோறும் தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரப் பூஜைகளும் நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி திருத்தேர் திருவிழா வெகு விமர்ச்சியாக இன்று நடைபெற்றது.
பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரப் பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு நர்மணத் பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகப் பூஜைகளும் நடைபெற்றது.

இதனையடுத்து அருள்மிகு நடுபழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் திருத்தேரில் எழுத்தருளிய நிலையில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் வழிபட்டதோடு கன்றுகுட்டிகள் மற்றும் சேவல் கோழிகளை காணிக்கையாக பத்தர்கள்  வழங்கி வழிபட்டனர். மேலும் பங்குனி உத்திரத் திருவிழாவினை முன்னிட்டு காலை முதல் மாலை வரை மாபெரும் அன்னதானமும் இடைவிடாது நடைபெற்றது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா 
கிருஷ்ணசிங், பரம்பரை நிர்வாக தர்மகர்த்தா சக்கரவர்த்தி,
 பி.சி.ஆர்.மனோகரன், மகாராஜன், திருக்கோவில் அன்னதான கமிட்டி தலைவர் சின்னசாமி, நிர்வாக குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ஜெயவேல், முருகன், ஏர்குல்ஸ், முருகேஷ், பச்சியப்பன், ராமு, ஸ்டாலின், சங்கர், புகழேந்தி, ராமலிங்கம், அர்சுனன், சம்பத், திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ், இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் கிருஷ்ணன், உதவி ஆணையர் இராமவேல், ஆய்வாளர் இராமமூர்த்தி ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ