விவசாயிகளுக்காக அமைக்கப்பட்டு வரும் மின் பகீர்மானத்தை அமைக்க விடாவிட்டால் போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்கம் அறிவிப்பு..!

கிருஷ்ணகிரி

விவசாயிகளுக்காக அமைக்கப்பட்டு வரும் மின் பகீர்மானத்தை அமைக்க விடாவிட்டால் போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்கம் அறிவிப்பு..!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே விவசாயிகளின் மின் பற்றாக்குறையை போக்க மின்வாரியத் துறையினர் அமைத்து வரும்
புதிய மின் பகீர்மானம் அமைப்பதற்கு வனத்துறையினர் தடையாக இருப்பதாக தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்,

விவசாயிகளுக்காக அமைக்கப்பட்டு வரும் மின் பகீர்மானத்தை அமைக்க விடாவிட்டால் போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள சுண்டட்டி கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கு ஆழ்துளை  கிணறு மூலமமாக விவசாயம் செய்ய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது,

தற்போது இந்த மின்பகீர்மானத்தில் நூற்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதால் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சுண்டட்டி கிராமத்தில் புதிய மின்பகீர்மானம் அமைக்க ஏற்பாடுகள் செய்து மின்கம்பம் அமைக்கப்பட்டது,

ஆனால் இந்த இடம் வனத்துறையினருக்கு சொந்தமான இடமாக இருப்பதால் ஒசூர் வன கோட்டத்தை சேர்ந்த ராமமூர்த்தி, சத்திவேல் ஆகிய இரு வனத்துறையினரும் தடையாக இருப்பதால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் 
இராம கவுண்டர் மற்றும் விவசாயிகள் சுண்டட்டி கிராமத்தில்
நிறுத்தப்பட்டுள்ள மின்பகீர்மானத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பேசிய இராமகவுண்டர் .....
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஆழ்துளைக் கிணறு அமைத்து விவசாயம் செய்ய மின்பகீர்மானம் அமைத்து மின் வினியோகம் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் காலப்போக்கில் ஏராளமான விவசாயிகள் மற்றும் ஜல்லி தொழிற்சாலைகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டதால் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் மூலமாக மின்வாரியத் துறையினர் புதியதாக மின்பகீர்மானம் அமைத்து மின்கம்பிகள் இழுக்கப்பட்டது. ஆனால் இந்த இடம் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருப்பதால் மின்கம்பிகள் இழுக்கக்கூடாது என வனத்துறையை சேர்ந்த ராமமூர்த்தி, சததிவேல் ஆகிய இருவரும் தடையாக உள்ளனர்.

ஆகையால் இந்த இடம் அனாதை நிலம்மாக இருப்பதல் இந்த நிலத்தினை வனத்துறையினர் சொந்தம் கொண்டாட முடியாது ஆகையால் ஒசூர் வன கேட்ட அலுவலர் இது தொடர்பாக தடையாக இருக்கும் இண்டு வன ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து  தடை இல்லா சான்றிதழ் வழங்கி விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றப்பட வேண்டும் இல்லையேல் ஒசூர் வனக்கோட்ட அலுவலகம் முன்பாக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்.

அப்போது  மாவட்ட பொது செயலாளர் அனுமந்தராசு, மாவட்ட துணை தலைவர்கள் கன்னியப்பன், கோவிந்தராஜ், மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, ஒன்றிய செயலாளர் தூர்வாசப்பன், ஊர் கவுண்டர், சீனப்பா, ராமகிருஷ்ண ரெட்டி, ஆனந்தன், வெங்கடேஷ், ஹாப்பி, அப்பையா, கிஷோர்குமார், ஜெயந்த் குமார், புஷ்பா, தனம், ஜெய், அமரேஷ், பில்லப்பா, வினைக்குமார்,  சீனப்பா, சம்பங்கி, மாதேஷ், மாதையன், பரமசிவன், ஆனந்த்தப்பா, ராமப்பா, பச்சையப்பன், திம்மராயன், கிருஷ்ணரெட்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ