இந்திராகாந்தியின் நினைவு நாளினை முன்னிட்டு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அன்னை இந்திரா காந்தியின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் இந்திராகாந்தியின் நினைவு நாளினை முன்னிட்டு, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அன்னை இந்திரா காந்தியின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பயங்கரவாத உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
காவேரிப்பட்டினம் பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் அருகில், அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அன்னை இந்திரா காந்தியின் திரு உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எல் சுப்பிரமணியன் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொண்டதோடு நாடு நலம் பெற இளந்தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நல்லாட்சி அமைந்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் வட்டார பொறுப்பாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு நாள் கூட்டத்திற்கு வட்டார பொறுப்பாளர் பாக்கியராஜ், தங்கையா, முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணி, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்து, நகர தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிறுபான்மை பிரிவு தலைவர் முஸ்தப்பா, மாவட்ட துணைத் தலைவர் சத்திவேல், கலைப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் தேவேந்திரன் மற்றும் நகர நிர்வாகிகளான தினேஷ் கௌதம், பாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அன்னை இந்திரா காந்தியின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ
