கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 77 வது குடியரசு தின விழா. !
77 வது குடியரசு தினம்
77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 77 வது குடியரசு தின விழா கல்லூரி முதல்வர் மரு.க. சத்தியபாமா.எம்.எஸ். (பொது அறுவை சிகிச்சை) தலைமையில் நடைபெற்றது.
மருத்துவ கண்காணிப்பாளர் மரு. ப. சந்திரசேகரன், துணை முதல்வர் மரு சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர் செல்வராஜ் உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் கே. எஸ். தினேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை போலுபள்ளி புதிய வளாகத்தில் கல்லூரி முதல்வர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறையிலும் 2025 ஆம் ஆண்டு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள், கிறிஸ்டல் பணியாளர்கள், ஆகிய 103 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 2025 ஆம் ஆண்டில் தமிழகத்தின் மேற்கு மண்டலமாக விளங்கக்கூடிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களில் மருத்துவ சிகிச்சை அளிப்பதிலும் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மை பராமரிப்பில் 338 புள்ளிகள் பெற்று மண்டல அளவில் பொதுமருத்துவ துறை, மகப்பேறு (ம) குடும்ப நலம் , குழந்தை நலத்துறை, எலும்பு முறிவு துறை ஆகியவற்றில் சிகிச்சையளிப்பதில் முதல் பரிசும், அறுவை சிகிச்சை துறை இரண்டாம் பரிசும் பெற்று சுகாதார பராமரிப்பில் மாநில அளவில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி முதல் பரிசு பெற்றும் தேர்வு பெற்றுள்ளது.
இந்த பாராட்டுக்கு காரணமான அனைத்து துறை பேராசிரியர்கள் இணை பேராசிரியர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள் தூய்மை பராமரித்த கிருஷ்ணகிரி கிரிஸ்டல் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு தொடர்ந்து இதே போல் பல பரிசுகள் தேசிய அளவில் பெற அவரவர்கள் அவரவரது துறைகளில் பணிகளை கடமையை தவறாது செய்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2025 ஆம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் செவிலியர்கள் இதர தொழில்நுட்ப பணியாளர்கள் அமைச்சு பணியாளர்கள் ஆகியோரில் 16 நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று 26/1/2026 மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெற்ற 77வது இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
அதுபோல கிருஷ்ணகிரி நகர் பகுதியில் இயங்கும் மகப்பேறு மற்றும் குடும்ப நல பிரிவு மருத்துவமனையில் உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர் மது தலைமையில் உதவி உள்ளிருப்ப மருத்துவர்கள், அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள் கிரிஸ்டல் பணியாளர்கள் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 77வது இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தை கொண்டாடி மகிழ்ந்தனர் என தெரிவித்து கொள்ளப்படுகிறது.
செய்தியாளர்
மாருதி மனோ
