மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி.!
கிருஷ்ணகிரி
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
இந்நிகழ்ச்சியில் முதல்வர் கே சத்தியபாமா, மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வராஜ் உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் தினேஷ், சமூகநல மருத்துவத்துறை பேராசிரியர் பொறுப்பு மரு. சரவணன், அறுவை சிகிச்சை பிரிவுத்துறை தலைவர் பொறுப்பு மரு. சதாசிவம், இணை பேராசிரியர்கள் மரு.விமலா, மரு. ராமமூர்த்தி, உதவிப் பேராசிரியர்கள் மரு. செந்தில்குமார், மரு ராஜலட்சுமி, மரு. அருணேஸ்வரி, மரு. யாமினி, புற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் மரு.விஜய், நிர்வாக அலுவலர் எஸ் கே சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் கல்லூரி முதல்வர் அவர்கள் தெரிவித்ததாவது.
இந்தியாவில் ஆண்டிற்கு சுமார் 1.5 லட்சம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் ஆண்டுக்கு சுமார் 80,000 பேர் இறந்து போகிறார்கள்
மார்பக புற்றுநோய் பொதுவாக ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படுகிறது. 12 வயதிற்கு முன்பாகவே பூப்படைதல், 55 வயதுக்கு மேல் மாதவிடாய் நிறுத்தம், (மெனோபாஸ் ) ஏற்படுத்துவது குழந்தையின்மை, 30 வயதிற்கும் மேல் முதல் குழந்தை பெற்றுக் கொள்வது, ஹார்மோன் சிகிச்சையில் இருப்பவர்கள் ஆகியோர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் இது மரபணு மூலமாகவும் ஏற்படுகிறது அதிக உடல் பருமன் உள்ளவர்கள் உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்கள் கொழுப்பான உணவு உண்பவர்கள் மது புகைபிடித்தல் ஆகிய பழக்கம் இருப்பவர்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே உணவில் அதிக அளவு காய்கறிகள் அதிக அளவு பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும் முறையான வாழ்க்கை முறை பழக்கங்கள், உடற்பயிற்சி , யோகா, ஆகியவை செய்வதால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் வயது அதிகமாகும் போது மார்பக புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கிறது.
மார்பக புற்றுநோய் ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை குணப்படுத்த இயலும் எனவே அனைவரும் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று மருத்துவ மார்பக பரிசோதனை கிளினிக்கல் பிரஸ்ட் எக்ஸாமினேஷன் செய்து கொள்ள வேண்டும்.
மேலும் 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மார்பக எக்ஸ்ரே ( மெமோகிராம்) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் இந்த மார்பக எக்ஸ்ரே மெமோகிராம் வசதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ளது.
மேலும் மார்பக புற்றுநோய் சிகிச்சை என்பது அறுவை சிகிச்சை (சர்ஜரி) புற்றுநோய் மருந்து சிகிச்சை (கீமோதெரபி) கதிர்வீச்சு சிகிச்சை (ரேடியோ தெரபி) மற்றும் ஹார்மோன் சிகிச்சை ஆகியவை உள்ளடக்கியது
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை (சர்ஜரி) புற்றுநோய் மருத்துவ சிகிச்சை (ஹீமோதெரபி) ஹார்மோன் சிகிச்சை ஆகியவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
நோய் முற்றிய நோயாளிகளுக்கு வலி மற்றும் ஆதரவு சிகிச்சை மையம் (பெயின் அண்ட் பேலியடிவ் கேர் ) வழங்கப்படுகிறது இதில் தேவைப் படுபவர்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 30 முதல் 40 வரையிலான நபர்களுக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது மேலும் 500 மருத்துவ பயனாளிகள் கிமோதெரபி சிகிச்சை செய்து பயனடைந்து வருகின்றனர்
எனவே கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் இவ் வசதியனை பயன்படுத்தி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயன் பெறுமாறு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நாள் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் இது குறித்து நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த புற்றுநோய் சிகிச்சை பெற்று வருபவர்களும், சிகிச்சையின் மூலம் பயனடைந்தவர்கள் சார்பாக ஆசிரியர் ஒருவர் தெரிவித்ததாவது.
எனக்கு மார்பக புற்றுநோய் வந்த போது நான் மிகவும் பயந்து போய் விட்டேன் இதற்கு சிகிச்சை பெற்றால் முடி கொட்டிவிடும் நம் அழகு குறைந்து பார்க்கவே நன்றாக இருக்க மாட்டோம் உடல் மெலிந்து விடும் என நினைத்து எப்படி சிகிச்சை எடுப்பது எங்கே சிகிச்சை எடுப்பது என பயமாக இருந்தது ஆனால் எனது மகள் உடனே நல்ல சிகிச்சை எடுக்க வேண்டும் என எனக்கு தைரியம் வழங்கினார். நான் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்தேன். எனக்கு நல்ல முறையில் கலந்தாலோசனைகள் வழங்கி உரிய சிகிச்சைகள் வழங்கினார்கள்.
எனக்கு முதல் கட்ட நோயாக இருந்ததால் குறைந்த காலத்திலேயே எனக்கு என் நோய் குணமடைந்துவிட்டது. இந்த நோய் வந்து விட்டால் நமக்கு மன அழுத்தம் அதிகமாகி பயந்து சோர்ந்து விடுவோம் அவ்வாறு எல்லாம் இல்லாமல் முறையாக சிகிச்சையை நாம் முறையான இடத்தில் எடுத்துக் கொண்டோம் என்றால் நமக்கு ஆயுள் கூடும், இதனால் பயப்படாமல் இந்நோய்க்கு உரிய சிகிச்சை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து முதல்வர் அவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ
