பேட்ராயசுவாமி கோவிலில் அருள்மிகு ஸ்ரீ தேவி, பூதேவி திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

பேட்ராயசுவாமி கோவிலில் அருள்மிகு ஸ்ரீ தேவி, பூதேவி திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி மாவட்டம், எலத்தகிரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள பேட்ராயசுவாமி கோவிலில் அருள்மிகு ஸ்ரீ தேவி, பூதேவி திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள எலத்தகிரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பேட்ராய சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத வருடாந்திர விழா மற்றும் திருக்கல்யாண வைபோக விழா நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபோக விழாவினை யொட்டி கணபதி பூஜைகளுடன் ஸ்ரீ பேட்ராய சுவாமிக்கு தீர்த்த அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.

இதனைத் தொடந்து எலத்தகிரி, காத்தாடி குப்பம், மேல் காத்தாடி குப்பம் ஆகிய மூன்று கிராமங்களில் இருந்து மக்கள் மேளத்தாளங்களுடன் சீர்வரிசைத் தட்டுகளுடன் கலந்து கொண்டனர்.

பின்னர் ஶ்ரீ பேட்ராய சுவாமி மற்றும் ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் மணமக்கள் கோலத்தில் காட்சியளித்தனர்.

தொடர்ந்து மாப்பிளை அழைப்புகளுடன் ஸ்ரீதேவி, பூதேவி, பேட்ராயசுவாமிக்கு மங்கள வாத்தியங்களுடன் வேதமந்திரம் முழங்கிட சுவாமிக்கு திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து  சுவாமிகளுக்கு மாலை மாற்றியும் மஹா மங்களார்த்தியும் நடைபெற்றது,

பின்னர் மணக்கோலத்தில் காட்சியளித்த ஸ்ரீ பேட்ராயசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமிகளை எலத்தகிரி மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டதோடு அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டன. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, பேட்ராய சுவாமிகளின் திருவீதி உலாவும், வான வேடிக்கையும் நடைபெற்றது,

இந்த விழாவிற்கான ஏற்படுகளை எலத்தகிரி, காத்தாடிகுப்பம், மேல் காத்தாடி குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ