அருள்மிகு ஸ்ரீ மண்டு மாரியம்மன் திருக்கோவில் மண்டல பூஜையை நிறைவினை யொட்டி பால்குடம் ஊர்வலம் மற்றும் தீமிதி விழா .!

கிருஷ்ணகிரி

அருள்மிகு ஸ்ரீ மண்டு மாரியம்மன் திருக்கோவில் மண்டல பூஜையை நிறைவினை யொட்டி பால்குடம் ஊர்வலம் மற்றும் தீமிதி விழா .!

கிருஷ்ணகிரி அருகே உள்ள பைனப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மண்டு மாரியம்மன் திருக்கோவில் மண்டல பூஜையை நிறைவினை யொட்டி பால்குடம் ஊர்வலம் மற்றும் தீமிதி விழா நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓரப்பம் அருகே உள்ள பைனப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மண்டுமாரியம்மன் திருக்கோவில் சிதலமடைந்த நிலையில் காணப்பட்டதால் கிராம மக்கள் ஒன்றிணைந்து பழைய கோவிலை இடித்து விட்டு புதிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் சிவச்சாரியர்கள் மூலம் நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஶ்ரீ மண்டுமாரியம்மன் திருக்கோவிலின் 48 நாள்களுக்கு தொடர்ந்து மண்டல பூஜைகள் நடைபெற்று வந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று மண்டல பூஜையின் நிறைவு நாளினை முன்னிட்டு அம்மன் கரகத்துடன் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது,
இதில் பைனப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் ஶ்ரீ மண்டு மாரியம்மன் கரகத்துடன்  மேளத்தாளங்களுடன் ஊர்வலமாக வந்தனர்,

பின்னர் திருக்கோவில் முன்பாக அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் அம்மன் கரகத்துடன் இறங்கியதை அடுத்து பெண்கள் பால் குடத்துடன் தீ குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

இதனையடுத்து திருக்கோவில் கருவறையில் வீற்றிருக்கும் ஶ்ரீ மண்டு மாரியம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலினை ஊற்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டி வழிபட்டனர், இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியர்கள் ஸ்ரீ மண்டுமாரியமனுக்கு சிறப்பு அலங்காரப் பூஜைகளும், கற்பூர தீபாதரணைகளும் நடைபெற்றது,

பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ மண்டு மாரியம்மனை ஏராளமான மக்கள் தரிசனம் செய்து வழிபட்டதோடு தலையில் தேங்காய் உடைத்தும் வழிபட்டனர், பின்னர் மண்டல பூஜையை யொட்டி அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது

மேலும் இந்த மண்டல பூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை 
பைனப்பள்ளி அருள்மிகு ஸ்ரீ மண்டுமாரியமன் திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்கவுண்டர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ