பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 3 நாட்கள் பயிற்சி..!

கிருஷ்ணகிரி

பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 3 நாட்கள் பயிற்சி..!

கிருஷ்ணகிரியில் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் 3 நாட்கள் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்பயிற்சி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என பெருமிதம்.

கிருஷ்ணகிரியில் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கீழ் பெண்களுக்கான மூன்று நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி முகமூலமாக பெண்களுக்கு மூலிகை சோப்பு, ஷாம்பு, மற்றும் மூலிகை வகையான பொருட்கள் தயாரிப்பது குறித்தும் வங்கிக் கடன் பெறுவது எப்படி, தொழில் தொடங்கும் முறைகள், ஆன்லைன் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வது போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி மற்றும் செயல்விளக்கப் பயிற்சிகளை கோவையைச் சேர்ந்த நுகர்வோர், குழந்தைகள் உரிமை மற்றும் பெண்கள் வளர்ச்சி பாதுகாப்பு மையத்தின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபாரதி, தொண்டு நிறுவன இயக்குனர் சத்தியபிரியா, பயிற்றுனர் முரளி ஆகியோர்கள் கலந்துக் கொண்டு பயிற்சி மற்றும் செயல்விளக்க பயிற்சிகளை அளித்தனர். 

மேலும் மூன்று நாள்கள் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக 
கல்லூரியின் முதல்வர் திருமதி கீதா கலந்துக் கொண்டு தொழில்முனைவோர் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கி இது போன்ற பயிற்சிகள் எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு இனிமேல் அளித்து அவர்களையும் தொழில் முனைவோர்களாக ஆக்குவதாக  தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் முடித்து தமிழக அரசால் சான்றிதழ் பெற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக  உள்ளது, 

இந்த பயிற்சிகள் எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் இனியாரையும் சார்ந்து கைக்கட்டி நிற்க வேண்டிய அவசியம் இல்லை, இந்த பயிற்சி மூலம் எங்களாலும் 10 பேருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

மேலும் இப்பயிற்சி முடித்தவர்கள் தொழில் தொடங்க தமிழ்நாடு அரசு சார்பில் மானியத்துடன் கூடிய கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று  குறிப்பிட்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ