வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யும் கட்சிக்கு ஆதரவளிப்பது என தீர்மானம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யும் கட்சிக்கு ஆதரவளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்த பையூரில் தமிழக விவசாய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இச்சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் உதயகுமார், மாநில துணைச் செயலாளர் கோணப்பன், மாநில துணைத் தலைவர் அரி மூர்த்தி, மாநில துணைத்தலைவர் முருகன், மாநில பொருளாளர் சுபாஷ் , மாநில அமைப்பாளர் ராமதாஸ், மாவட்ட தலைவர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்,

மேலும் இந்தக்கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும்
தேசிய வங்கிகளில் சிறு குறு விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் பெற்ற கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்,
விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 10 ஆயிரம் வழங்கிட வேண்டும்,
மிளகாய், மஞ்சள் போன்ற வாசனை மசாலா பொருட்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட
வேண்டும்,
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும்,
விவசயிகள் மீது வனத்துறையினர்கள் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும்,
காட்டுப் பன்றியை சுட்டு கொல்ல விவசாயிகளுக்கு அனுமதி
அளிக்க வேண்டும்,
விவசாயிகள் உற்பத்தி செய்யும் மாங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்,
குண்டு மல்லி விவசாயத்தினை பாதுகாக்க செண்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும்,
நெல் கொள்முதல் நிலையம் அமைத்திட வேண்டும்,
உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் வேணுகோபால்......
வன விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்சம் ஆதரவு விலையை உத்திரவாதப்படுத்தும் சட்டம் இயற்றி எம்.எஸ், சாமிநாதன் கமிஷன் அறிக்கையின் படி பயிர் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், ஒவ்வொரு தேர்தல் அறிக்கைகளிலும் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி என்பது கானல் நீராகவே உள்ளது, ஆகவே இந்த தேர்தலில் கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யும் கட்சிக்கு ஆதரவளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்,
மேலும் இந்தக்கூட்டத்தில் விவசாய சங்கத்தை சேர்ந்த கிழக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் சிவகுமார், மாவட்ட துணை செயலாளர் வெங்கட்ராமன்,
மாவட்ட பொருளாளர் சம்பத், மற்றும் விவசாய சங்கத்தினை சேர்ந்த கோபால், பி,சி ராஜ், தமிழரசன், குமார், சிதம்பரம் க வரதராஜ், கோவிந்தம்மாள், ராமமூர்த்தி, ரங்கநாத், குள்ளப்பன், சீனிவாசன், சித்தலிங்கப்பா, பசுவன், அண்ணாமலை, ஜம்புலிஸ்கேஸ்வரன், குமரேசன் , நாராயணப்பா, வெங்கட்ராமன், முன்ராஜ், முனியப்பன், மூர்த்தி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளும் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
