தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தினை ரத்து செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் பர்கூர் வட்ட கிளை துவக்க விழா நடைபெற்றது,
மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் நந்தகுமார், மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வைத்தனர்,
மேலும் இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலக சங்கத்தின் மத்திய, மாநில செயற்குழு உறுப்பினர் மணி கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார்,
அப்போது புதிய பென்ஷன் திட்டத்தினை ரத்து செய்வது பழைய ஓய்வு திட்டத்தினை நடைமுறைப்படுத்த தமிழக அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது,
மேலும் இந்த கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற முன்னாள் வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன், முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட பொருளாளர் ஜெயபால், துணைத் தலைவர் தேவி, மற்றும் ராமலிங்கம், செந்தில், மாநிலச் செயலாளர் கிருஷ்ணன், சிவனேசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பன்னீர்செல்வம், பார்த்திபன், சிவனேசன் உள்ளிட்ட பலர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ