புதியதாக அதிமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வாசுதேவனுக்கு அதிமுக சால்வாவை அணிவித்த முன்னால் அமைச்சர். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி முன்னிலையில் முன்னாள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கிருஷ்ணகிரியை சேர்ந்த முன்னாள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன் புது மனை புகுவிழா நடைபெற்றது, இந்த விழாவிற்கு அதிமுக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி முனுசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அசோக்குமார் ஆகியோர் வருகை தந்தனர். முன்னாள் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் காவல் ஆய்வாளர் அமுதா வாசுதேவன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து
சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகிரியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற வாசுதேவன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி செயல்பாட்டினால் ஈர்க்கப்பட்டு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி முன்னிலையில் அதிமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதனையடுத்து கழக துணைப்பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி புதியதாக அதிமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வாசுதேவனுக்கு அதிமுக சால்வாவை அணிவித்து வரவேற்றார்.

அப்போது நகர செயலாளர் கேசவன், ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், கூட்டுறவு சங்கத்தலைவர் சைலேஷ் கிருஷ்ணன், ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் ஆஜி, எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் திம்மராயன், அம்மா பேரவை மாவட்ட பொருளாளர் கோபி, ஒன்றிய துணைச் செயலாளர் சத்திவேல், கிளை செயலாளர் தியாகராஜன், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
