சட்டமன்ற தேர்தலை கவனிக்கும் பொறுப்புகள் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.!
பா.ஜ.க
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரான அண்ணாமலைக்கு தற்போது கட்சியில் புதிய மற்றும் முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் குறிப்பிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான பாஜகவின் சுற்றுப்பயணப் பொறுப்பாளராக அண்ணாமலைநியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி மற்றும் ராதாபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் கட்சியின் களப்பணிகளை ஒருங்கிணைக்கும் மற்றும் வலுப்படுத்தும் பணிகளை அண்ணாமலை கவனிப்பார்.
அதேபோல், மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கும் தமிழகத்தில் தேர்தல் பணிகளுக்கான முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு மற்றும் உதகமண்டலம் ஆகிய தொகுதிகளுக்கு அவர் சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மேலிடம் வழங்கியுள்ள இந்த அதிரடி உத்தரவின் மூலம், வரும் தேர்தலை எதிர்கொள்ள பாஜக இப்போதே தயாராகி வருவது தெரிகிறது.
இந்த நியமனங்கள் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும், பூத் கமிட்டி பணிகளை முடுக்கிவிடவும் இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்ணாமலை மற்றும் எல். முருகன் ஆகிய இருவரும் விரைவில் தங்களது ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் சுற்றுப்பயணத்தை தொடங்கி, தீவிர களப்பணியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .
