முதல்வரின் வரவேற்பில் அசத்திய முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனன்.!
செங்கல்பட்டு
முதல்வரின் வரவேற்பில் அசத்திய முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா மயில்வாகனன்.!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுசேரி சிப்காட் தொழில் நுட்ப பூங்கா வளாகத்தில் அமைந்துள்ளது நாவலூர் ஏரி., இந்த எரியினை தூய்மைபடுத்தி சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்படுத்தி, புனரமைத்து அமைக்கப்பட்டுள்ள சிப்காட் சுற்றுச்சூழல் பூங்காவினை பொது மக்கள் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முன்னதாக சிறுசேரி அருகே முட்டுக்காடு ஊராட்சி தி. மு. க. சார்பாக முதல்வருக்கு பிரம்மாண்ட விளம்பர பதாகைகள் வைத்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சிறப்பான வரவேற்பளித்து அசத்தினார் முட்டுக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா மயில்வாகனன் மற்றும் மாவட்ட பிரதிநிதி மயில்வாகனன் மற்றும் முட்டுக்காடு ஊராட்சி தி.மு.க.வினர். இன்நிகழ்வில் சிறு-குறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒன்றிய பெருந்தலைவர். எஸ் ஆர் எல் இதயவர்மன், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் எம்.சேகர், நாவலூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகாலட்சுமி ராஜாராம், நாவலூர் ஊராட்சி தி. மு. க. கிளை கழக செயலாளர் மு. ராஜாராம் மற்றும் முட்டுக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா மயில் வாகனன் மாவட்ட பிரதிநிதி மயில்வாகனன் ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்
சுகுமாரன்
