திருப்போரூர் முருகன் கோவில் விழா அழைப்பிதழ்களில் இடம்பெறும் சாதிய பெயர்களுக்கு தடை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

செங்கல்பட்டு

திருப்போரூர் முருகன் கோவில் விழா அழைப்பிதழ்களில் இடம்பெறும் சாதிய பெயர்களுக்கு தடை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

திருப்போரூர் முருகன் கோவில் விழா அழைப்பிதழ்களில் இடம்பெறும் சாதிய பெயர்களுக்கு தடை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

நீதியரசர்களுக்கு- துணை நின்றவர்களு க்கும்., நன்றி தெரிவித்து வி.சி.க. சமரன் அறிக்கை."

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவில் உற்சவ தேர் வீதி உலா, ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்வதை பிரமோற்சவ பெருவிழா அழைப்பிதழ்களில் குறிப்பிட கடந்த 03:02:2025 ஆம் ஆண்டும் அதற்கு முன்பும் கோவில் நிர்வாகத்திடமும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடமும் ஆதி திராவிட மக்கள் சார்பாக மனுக்கள் கொடுத்தும், வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.,

மேலும் கடந்த ஆண்டு பிரமோற்சவ அழைப்பிதழ்களில் தண்டலம் வீதி உலா குறிப்பிடப்படவில்லை. ஆனால் இவ்வாண்டு அது இடம்பெற்றுள்ளது. இதனை கண்டித்து மனு அளித்தும்  ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி பெயர் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதையும்; மனுவே கொடுக்காத ஒரு கிராமத்தின் பெயர் இடம்பெறுவது 
எப்படியென்றும்?இது நிர்வாக அலட்சிய போக்கா? அல்லது சாதிய ஆணவமாயென? கேள்வி எழுப்பியும்,, 

மேலும் உபயதாரர்கள் விவரத்தில் சாதிய அடையாளங்களுடன் பெயர்கள் தொடர்ந்து அச்சடிக்கப்பட்டிருப்பதும் 
கோவில் விழா அழைப்பிதழ்களில் சாதிப் பெயர்கள் குறிப்பிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியும், இந்த சாதிய பாகுபாடு தொடர்வது வேதனை அளிப்பதாகவும்

இது..புரையோடிப்போய் கிடந்த சமூகத்தை தமது  எழுத்துகளாலும் பேச்சுகளாலும் மாபெரும் செயல்பாடுகளாலும் சீர்திருத்தம்  செய்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் ஆட்சி நடத்தி வரும் திராவிட மாடல் அரசுக்கு களங்கம் உண்டாக்கும் வகையில்
பக்தியின் ஊடாக கோவில் நிர்வாகத்தில் பங்குபெறும் உயர்சாதிகளும் அவர்களது இடை நிலை சாதி கூட்டாளிகளும் கோயிலின் பெயரால் சாதிய ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நிறுத்தி வருகின்றனர்.
கோவில்களில் வீற்றிருப்பது: சாமிகளா? சாதிகளா?

சாதியற்ற விழா நடத்த இயலாத அரசு நிர்வாகம், சமூகநீதியை எப்படி காக்கும்?” என்ற கேள்விகளை எழுப்பி நீதிமன்றத்தில் ஆதி திராவிட மக்கள் சார்பாக வழக்கு தொடுத்திருந்தினர்.
இன்றைய தினம் இவ்வழக்கு விசாரணக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் திருப்போரூர் முருகன் கோவில் விழா அழைப்பிதழ்களில் இடம்பெறும் சாதிய பெயர்களுக்கு தடைவிதித்து, அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இப்படி சமூக நீதிக்கு எதிராக செயல்படும் நிர்வாகத்தை கண்டித்தும் சமத்துவ சமூக நீதி கோரிக்கையையும் ஏற்று,
திருப்போரூர் முருகன் கோவில் விழா அழைப்பிதழ்களில் இடம்பெறும் சாதிய பெயர்களுக்கு தடைவிதித்து., சாதியற்ற சமத்துவ சமூகம் படைத்திட, ஆணை பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற மாண்பமை நீதிபதிகளுக்கும், துணை நின்ற யாவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து அறிக்கை வெளியுட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சமரன்.

செய்தியாளர்

  சுகுமாரன்