திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும் போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்!

த வெ க

திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும் போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்!

திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

விஜய்யை பார்க்க அதிக அளவில் ரசிகர்கள் குவிந்த நிலையில், அதில் 2 பெண்கள் மயக்கமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரச்சாரம் எனில், அதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. இத்தனைபேர்தான் கூட வேண்டும் என்கிற கணக்கு இருக்கிறது. ஆனால், விஜய்யின் எந்த பரப்புரையிலும் இந்த எண்ணிக்கை பின்பற்றப்படாதது தான் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். முன்னதாக சென்னை பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அவர், வில்லிவாக்கத்தில் பரப்புரை செய்ய இருந்தார். ஆனால், அங்கும் அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால், பிரச்சாரம் நடத்தாமல் கிளம்பிவிட்டார். இப்படி இருக்கையில், அவர் போட்டியிடும் இரண்டாவது தொகுதியான திருச்சி கிழக்கில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் பிரச்சாரத்தையும் தொடங்கினார்.

ஆனால், இந்த கூட்டத்திலும் கட்டுக்கடங்காமல் ஆட்கள் கூடினர். வெயில் ஒரு பக்கம் ஏறிக்கொண்டிருக்கையில், மறுபுறம் விஜய்யை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் ரசிகர்கள் குவிந்தனர். ஒரு கட்டத்தில் கூட்டம் நெரிசலால் ஸ்தமித்தது. விஜய்யை பார்க்க வேண்டும் என்று வந்தவர்கள் எல்லாம், எப்படியாவது இந்த கூட்டத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று நினைக்க தொடங்கினர். ஆனால், அதற்குள் அந்த சம்பவம் நடந்துவிட்டது.

அதாவது, திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர்.சாலையில் பரப்புரை கூட்டத்தில் 2 பெண்கள் மயங்கி விழுந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் பரப்புரை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.