கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலைய அருகாமையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில்  100% வாக்களிக்க விழிப்புணர்வு பேரணி. !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலைய அருகாமையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில்  100% வாக்களிக்க விழிப்புணர்வு பேரணி. !

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலைய அருகாமையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில்  100% வாக்களிக்க வேண்டும் எனும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.தினேஷ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோர் கொடியசைத்து  துவக்கி வைத்தனர். 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி வேலு நாச்சியார் சிலம்ப பயிற்சியாளர் குரு ராகவேந்திரன் சார்பில் 20 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  நமது பாரம்பரிய கலையை எடுத்துரைக்கும் வகையில் சிலம்பக் கலையை மாணவ மாணவிகள் ஆர்வமுடன் செய்து காட்டினார்கள். சிலம்பக்கலையை கண்டு ரசித்த  பொதுமக்களும் வந்திருந்தவர்களும் மாணவிகளையும் மாணவர்களையும் பெரிதும் பாராட்டினார்கள்.

செய்தியாளர் 

மாருதி மனோ