மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நடவு செய்தார் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பசுமை தமிழக இயக்கம், கோத்தாரி இன்டஸ்டிரியல் கார்ப்பரேசன் லிமிடெட் மற்றும் எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன், இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நடவு செய்தார்.
உடன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கவிதா, வன விரிவாக்க கோட்ட அலுவலர் சி.தினேஷ் குமார், வன உயிரின கோட்ட உதவி வன பாதுகாவலர் பசவ்சிங் இவபஇ வன சரக அலுவலர் ஜி.டி.மூர்த்தி, தனி வட்டாட்சியர் ( பேரிடர் மேலாண்மை ) வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர்
மாருதி மனோ
