தேர்தல் களம்: கேரளாவில் ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி.!

சட்டப்பேரவை தேர்தல்

தேர்தல் களம்: கேரளாவில் ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி.!

திருவனந்தபுரம் : கேரளத்தில் வரும் ஏப். 9-இல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கேரளத்துடன் சேர்த்து அஸ்ஸாம், புதுச்சேரியில் ஏப்.

9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப். 23-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் இருகட்டங்களாக ஏப். 23, 29-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையும் அதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளும் மே 4-இல் வெளியாகின்றன.

இந்நிலையில், கேரளத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் சிபிஐ(எம்) 86 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தமுறை தேர்தலில் போட்டியிட்டு இப்போது சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியிலுள்ளவர்களில் 56 பேருக்கு மீண்டும் இம்முறையும் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் தேர்வு முழுக்க முழுக்க ஜனநாயக முறையில் நடத்தப்படும் என்றும் திருவனந்தபுரத்தில் இன்று (மார்ச் 15) செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலர் எம். வி. கோவிந்தன் தெரிவித்தார்.