கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 41.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 500 திட்டப்பணிகளை திறந்து வைத்த துணை முதலமைச்சர். !
கிருஷ்ணகிரி
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 41.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 500 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 147.92 கோடி மதிப்பீட்டில் 709 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 10,709 பயனாளிகளுக்கு 326.93 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்ரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் தே.மதியழகன், ஒய்.பிரகாஷ், டி.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., ஒசூர் மாநகராட்சி மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் முகம்மது ஷபீர் ஆலம், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
