அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 2 சமூக நீதி விடுதிகள் என 15 பள்ளிகளுக்கு தலா ரூ.26 ஆயிரம் வீதம், ரூ.3 இலட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் நாப்கின் எரியூட்டி இயந்திரங்கள்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், டீல் பெரு நிறுவனம், சமூக பொறுப்பு நிதியின் கீழ், ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 2 சமூக நீதி விடுதிகள் என 15 பள்ளிகளுக்கு தலா ரூ.26 ஆயிரம் வீதம், ரூ.3 இலட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் நாப்கின் எரியூட்டி இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.வழங்கினார்.

உடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திருமதி.பத்மலதா, டீல் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட அலுவலர் பிரபு உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ