அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் தற்காப்பு திறன் குறித்த பயிற்சி நடைபெற்றது..!

கிருஷ்ணகிரி

அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் தற்காப்பு திறன் குறித்த பயிற்சி நடைபெற்றது..!

கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் தற்காப்பு திறன் குறித்த பயிற்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மகளீர் கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்கான கலைத் திருவிழா துவங்கியது. அரசு மகளீர் கலைக்கல்லூரியின் முதல்வர் திருமதி கீதா தலைமையில் நடைபெற்ற இந்த கலைத் திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

மாணவிகளுக்கு இடையே கலைத் திறனை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்று வரும் இந்த கலைத் திருவிழாவில் மொழித்திறன், தற்காப்புத் திறன், இசைத் திறன், மெய்ப்பாட்டுத் திறன், காட்சித் திறன், தனித் திறன், இயற்கை சீற்றம் போன்ற 7 தலைப்புகளில் 32 போட்டிகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பம் போன்ற கலைகளில் தனிக்கவனம் செலுத்தினார்கள்.

மேலும் மாணவிகளின் கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த கலைத் திருவிழாவில் முனைவர் கனகலட்சுமி. கலைப்பண்பாட்டுத் துறை ஞான சத்தி, மாவட்ட திட்ட அலுவலர் ஞான சத்தி,  தமிழ் நாட்டியாலயா மதுமொழி ஆனந்த்,  ராதை ரமேஷ், சிவபாலம்பிகை ஈஸ்வரி, உடற் கல்வி ஆசிரியர்கள் கிருஷ்ணராஜ், முருகன், இந்துமதி மற்றும் சிலம்பம் ஆசிரியர் குருராகவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு கலைப்பயிற்சிகளை மேற்கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ