சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் ஆடவர்  கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டம்  நிறைவு விழா"!

செங்கல்பட்டு

சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் ஆடவர்  கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டம்  நிறைவு விழா"!
 
 அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் -கோவி. செழியன்- அன்பில் மகேஸ் பங்கேற்பு.!

சென்னை வேளச்சேரி-தாம்பரம் சாலை, மேடவாக்கத்தில் அமைந்துள்ளதது. காயிதே மில்லத்  இரு பாலர் கல்லூரி

இதன் ஆடவர் கல்லூரியின் 50-ஆண்டு பொன்விழா கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி அரங்கம், கல்லூரி வளாகத்தில் மிக சீரும் சிறப்புடன் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு வாழ்த்துரையாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இசைந்திருந்தார்.ஆனால் அன்றைக்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் இருந்ததால் பங்கேற்க முடியாமல் போனது.

அதனை தொடர்ந்து கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் எம்.ஜி. தாவூத் மியாகான் தலைமையில் எ.முஹம்மத் அலி (தலைவர், CREDAI சென்னை. தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ( South India Shelter Put. Ltd.,)

ஜனாப் சிராஜுதீன்
(தலைவர், ராயல் கிங்ஸ் குரூப், சிங்கப்பூர்.) முனைவர் சே. சாதிக் (முன்னாள் துணை வேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்
புரவலர், காயிதே மில்லத் கல்லூரி, மேடவாக்கம், சென்னை.)
ஆகியோர் முன்னிலை வகிக்க

அமைச்சர்.மா. சுப்ரமணியன்
(மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வு துறை.,) உயர்கல்வி துறை அமைச்சர். முனைவர் கோவி. செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் தலைமையில் செய்து இருக்கும் சாதனைகளை பட்டியலிட்டு கல்லூரியின் பொன் விழாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இறுதியாக காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் நன்றி தெரிவிக்க விழா இனிதே நிறைவுற்றது.

ஏனோ விழாவின் அழைப்பிதழில தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் பெயர் விடுபட்டு இருந்தாலும் அவரும் கலந்து கொண்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்தார்.

செய்தியாளர்

   சுகுமாரன்