தமிழகத்தில் 4 நாட்கள் விடுமுறை....' - ட்விஸ்ட் கொடுத்த தேர்தல் ஆணையம்.!

தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 4 நாட்கள் விடுமுறை....' - ட்விஸ்ட் கொடுத்த தேர்தல் ஆணையம்.!

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது.

ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இடையில் மார்ச் 31 (செவ்வாய்), ஏப்ரல் 1 (புதன்), ஏப்ரல் 3 (வெள்ளி), ஏப்ரல் 5 (ஞாயிறு) ஆகிய 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கலுக்கு 4 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிரமாக வேட்பாளர் பட்டியலை தயார் செய்து வருகின்றன.