"800 கோடி ரூபாய் விமானத்துக்கு 'ஆப்பு' வச்ச ஈரான்" நடுவானில் சுடப்பட்ட அமெரிக்காவின் எப்-35...?

அமெரிக்கா Vs ஈரான்

"800 கோடி ரூபாய் விமானத்துக்கு 'ஆப்பு' வச்ச ஈரான்" நடுவானில் சுடப்பட்ட அமெரிக்காவின் எப்-35...?

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் மிகவும் அதிநவீனமான எப்-35 (F-35) போர் விமானம் ஒன்று ஈரானுக்கு எதிரான தாக்குதல் -ஐ முடித்துவிட்டு திரும்பும்போது, அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஐந்தாம் தலைமுறை ஸ்டீல்த் போர் விமானம், ஈரான் ராணுவத்தால் சுடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்க மத்திய கமாண்ட் செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறுகையில், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியுள்ளதாகவும், இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கிய பிறகு, ஈரானால் அமெரிக்க விமானம் ஒன்று குறிவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

​அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் முழுமையாக முறியடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிவரும் வேளையில், இந்த அவசரத் தரையிறக்கம் அமெரிக்காவின் பாதுகாப்புத் திறன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதற்கிடையில், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் வடக்கு இஸ்ரேலில் உள்ள மின் விநியோகக் கட்டமைப்பு கடுமையாகச் சேதமடைந்துள்ளது. ஹைஃபா நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஈரானின் கிளஸ்டர் குண்டுகள் தாக்கியதில் கரும்புகை வெளியேறும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே எப்-35 விமானங்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், ஈரானின் இந்த அதிரடி பதிலடி போரின் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளது