அகில இந்தியா 28 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் சார்பாக மாநாடு. !

கிருஷ்ணகிரி

அகில இந்தியா 28 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் சார்பாக மாநாடு. !

அகில இந்திய அளவில் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் விவசாய விலை பொருட்களுக்கு விலை கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அகில இந்தியா 28 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் சார்பாக அகில இந்திய தலைவரான ஜகதிஷ் சிங் தல்லேவால் தலைமையில் மாபெரும் மாநாடு இன்று 19.03.2026 வியாழக்கிழமை டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. 

ஓராண்டுகள் விவசாய விலை பொருள்களுக்கு விலை கொடுக்க வேண்டும். எம்.எஸ். சாமிநாதன் அவருடைய பரிந்துரை அமல்படுத்த வேண்டும், விவசாய விலை பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எல்லாம் வலியுறுத்தி நடைபெற்ற ஓராண்டு கால போராட்டத்திலே மத்திய அரசு செவி சாய்க்காத காரணத்தினால் உச்ச நீதிமன்றமே தலையிட்டு விவசாயிகளை அழைத்து பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையிலே, மத்திய அரசு விவசாயிகளை அழைத்து பேசியதில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் விவசாயிகள் வைக்கின்ற பெரும்பகுதியான கோரிக்கை மாநில அரசு சார்ந்தது, ஆகவே மாநில அரசு எங்களுக்கு பரிந்துரை அழைத்து அனுப்பினால் அதை நாங்கள் செய்ய தயார் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் கூறினார். 

அதன் அடிப்படையில் ஜகதிஷ்சிங் தல்லேவால் தலைமையில் பிப்ரவரி 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த 28 மாநில முதல்வர்களை சந்திக்கும் யாத்திரை துவங்கப்பட்டது.  இந்த யாத்திரையில் கர்நாடக தலைவர் சாந்தகுமார், தமிழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன், கே.எம்.ராமகவுண்டர் மற்றும் தேசியத் தலைவர்கள் அபிமன்யு இவர்கள் எல்லாம் சேர்ந்து இந்த யாத்திரை துவக்கப்பட்டது.

இந்த யாத்திரையில் தமிழக முதல்வர் பாண்டிச்சேரி முதல்வர், கேரள முதல்வர், கர்நாடக முதல்வர் என்று படிப்படியாக  இரண்டு மாதங்களுக்கு இந்தியாவில் உள்ள 28 முதல்வர்களையும் சந்தித்து இன்றைய இறுதி நாளாக டெல்லியில் ராம் லீலா மைதானத்திலே மரியாதைக்குரிய தேசியத் தலைவர் ஜகதிஷ்சிங் தல்லேவால் தலைமையிலே மாநாடு நடைபெற்றது. 

இந்த மாபெரும் மாநாட்டில்  ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற  இந்த கூட்டத்திலே 28 மாநிலங்களுக்கு கொடுத்த மனுவை ஏற்பதாக வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் சங்கம் விவசாயிகள் பெண்கள் என்ற அடிப்படையிலே கலந்து கொண்டனர்.

தமிழகத்திலிருந்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே எம் ராமகவுண்டர் தலைமையிலும், மாநில ஆலோசகர் கண்ணையா அவர்களின் முன்னிலையிலும், மாவட்ட பொதுச்செயலாளர் அனுமந்தராசு ஒருங்கிணைப்பிலும், மாவட்ட நிர்வாகிகள் ரவி, செல்வராஜ், முருகேசன், கோவிந்தராஜ், சின்னசாமி, முனுசாமி, வெங்கடேசன், சண்முகம், காளியப்பன், கோவிந்தன், மாரியப்பன், நாராயணன் மற்றும் பலர் தலைமையிலே கலந்து கொண்ட இந்த கூட்டத்திலே எடுக்கப்பட்ட முடிவின்படி அண்டை நாடுகளான 150 க்கும் மேற்பட்ட நாடுகளிலே உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இந்திய விவசாயிகள் அபரிமிதமாக உணவு உற்பத்தி செய்து அதை உற்பத்தி செய்த விலைபொருள்களுக்கு கட்டுப்படியான விலைக்கும் குறைவான விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு நிர்பந்தப்படுத்துவது மத்திய அரசும் மாநில அரசும். ஆகவே அந்த நிலைமை மாற்றி விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கின்ற வகையிலே இதை செய்ய வேண்டும் 

என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒவ்வொரு மாநில நிர்வாகிகளும் பேசிக்கொண்டு, அரசை வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே, இந்த கோரிக்கை மனுவை மத்திய அரசுகளை கொடுத்து மத்திய அரசு அனைத்து மாநில வேளாண்மை துறை மற்றும் அதைச் சார்ந்த துறைகள் எல்லாம் அழைத்து பேசி விவசாயிகளுக்கு உண்டான கட்டுப்படியான நியாயமான விலையும், டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் அவர்களுடைய பரிந்துரைப்படி உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் லாபத்துடன் கூடிய விலை கிடைப்பதற்கு உண்டான சூழ்நிலையை உருவாக்க வலியுறுத்தியும், அமெரிக்கா அரசு இந்திய அரசை வலியுறுத்தி  அமெரிக்காவில் இருந்து உணவு பொருள் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யக்கூடாது, பால் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது என்ற அடிப்படையிலும் விவசாயிகளை காப்பதற்கு வலியுறுத்தி இந்த கூட்டத்தின் மூலமாக எடுக்கப்பட்ட முடிவின்படி அரசு குறித்து வலியுறுத்துவதற்காக இன்று இந்த கூட்டத்திலே கலந்து கொண்டு விவசாயிகள் பேசி அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம்.

இந்த கூட்டத்திலே 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்கள். ஆகவே அரசு உடனடியாக இதன் மீது தலையிட வேண்டும் என்ற இந்த கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்திற்கு மக்கள் தயாராக வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பது இந்த கூட்டத்தின் வாயிலாக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

செய்தியாளர்

மாருதி மனோ