தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 ஐ முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம்.!
கிருஷ்ணகிரி
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 ஐ முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருமண மண்டபம் மற்றும் தனியார் விடுதி உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள், பதிப்பகத்தார்கள், அடகுக்கடை மற்றும் வட்டித்தொழில் புரிவோர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திருமதி.ஹெலன் ராணி, வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத்து உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
