சுமார் 800 ஆண்டுகள்  பழமை வாய்ந்த கால பைரவர் திருக்கோவிலில் நடைபெற்ற மஹா சிவராத்திரி.!

கிருஷ்ணகிரி

சுமார் 800 ஆண்டுகள்  பழமை வாய்ந்த கால பைரவர் திருக்கோவிலில் நடைபெற்ற மஹா சிவராத்திரி.!

கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள, சுமார் 800 ஆண்டுகள்  பழமை வாய்ந்த கால பைரவர் திருக்கோவிலில் நடைபெற்ற மஹா சிவராத்திரி பூஜையில், வெள்ளி கவசத்தில் காட்சி அளித்த கால பைரவர் சுவாமியை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் திருக்கோவில்களிலும், மஹாசிவராத்திரி விழாவினை முன்னிட்டு,  இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  அதேபோல கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய ஏரிக்கரையில்,  சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த  கால பைரவர் திருக்கோவிலில், மஹாசிவராத்திரி பூஜைகள் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

நல்லிரவு முதல் தொடர்ந்து நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையின் போது,  காலபைரவர் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும், அலங்கார கற்பூர தீபாராதணைகளும் நடைபெற்றது. மஹா சிவராத்திரியையொட்டி,  கால பைரவர் தங்ககவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த மஹா சிவராத்திரி விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, வெள்ளி கவசத்துடன் காட்சியளித்த கால பைரவரை தரிசனம் செய்து வழிபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, இரவு முழுவதும் மஹா சிவராத்திரி குறித்த பக்தி சொற்பொழிவும், பரத நாட்டிய நிகழ்ச்சிகளும்  நடைபெற்றது. இரவு முழுவதும் நடைபெற்ற மஹா சிவராத்திரி பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிபட்டனர்.

இதே போல சூரன்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள  சௌர்ண கர்ஷன பைரவர் திருக்கோவிலிலும், மஹா சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் பைரவர் சுவாமிக்கு வாசன திரவியங்கள் மூலம் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரப் பூஜைகளும், தீபாராதனைகளும் காண்பிக்கப்பட்டது.

இந்த மஹா சிவராத்திரி பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக் செண்டு வழிபட்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை,  கால பைரவர் திருக்கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ