கிருஷ்ணகிரியில் தி.மு.க. சார்பில் உலமாக்களுக்கு நல திட்டஉதவிகளை மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்..!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் தி.மு.க. சார்பில் உலமாக்களுக்கு நல திட்டஉதவிகளை மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மற்றும் நகர தி.மு.க. சார்பில் மசூதிகளில் உள்ள 210 உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தி.மு.க. நகர பொறுப்பாளர் அஸ்லம் தலைமை தாங்கினார். அரசு தலைமை ஹாஜி முப்தி கலீல் அகமத் வரவேற்றார். நகர பொறுப்பாளர் வேலுமணி, நகராட்சி கவுன்சிலர்கள் முபாரக், கராமத், பிர்தோஷ்கான், மதின் மற்றும் ரியாஷ், ஜாமிர், ஆகில், ரியாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 210 உலமாக்களுக்கு 25 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமைமாவு உள்ளிட்ட நல உதவிகளை வழங்கி பேசினார்.


அவர் பேசும் போது....... தி.மு.க. அரசு சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருந்து வருகிறது. மத்தியில ஆளும் பா.ஜனதா அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. கடவுளின் இறை துாதராக இருந்து வரும் உங்களுக்கு உதவி செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.-
இதில், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், கவுன்சிலர்கள் சீனிவாசன், ஆசிப், முகமது அலி மற்றும் ரியாஷ், முகமது ஜான், அஸ்கர் அலி ஜாவித்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
