கிருஷ்ணகிரிக்கு வருகை தரும் காங்கிரஸ் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் செல்லக்குமாருக்கு கூட்டணி கட்சியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானம். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு வருகை தரும் காங்கிரஸ் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் செல்லக்குமாருக்கு கூட்டணி கட்சியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை ஆகிய இரு சட்ட மன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டது, இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் செல்லக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கிருஷ்ணகிரி நகருக்கு வரும் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லக்குமாருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் இந்திய கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள திமுக, காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், இஸ்லாமிய கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது தீர்மானிக்கப்பட்டது,
அப்போது மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிஸ்பாபு,
கிருஷ்ணகிரி முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் முபாரக் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை எந்த துரைசாமி, மாவட்ட போதுக்கு குழு உறுப்பினர் ம உமர்ஜி,பர்கூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், கலைப்பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, மேற்கு மாவட்ட இணைஞர் அணி தலைவர் ரகுமான், முன்னாள் இளைஞர் அணி பொதுச் செயலாளர் விக்னேஷ், மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன், சேவா தள மாவட்ட தலைவர் தேவராஜ், மேற்கு மாவட்ட இணைஞர் காங்கிரஸ் தலைவர் அணில் குமார், மாவட்ட செயலாளர் ஹரி, தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்டத்தலைவர் கமல கண்ணன், டைட்டான் ஜான், பாண்டுரங்கன், வழக்கறிஞர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
