அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் செல்லக்குமார், கர்மவீரர் காமராஜர், மகாத்மா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி சட்ட மன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் செல்லக்குமார், கர்மவீரர் காமராஜர், மகாத்மா காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு இந்திய கூட்டணி கட்சியின் காங்கிரஸ் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளருமான டாக்டர் செல்லக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கிருஷ்ணகிரி நகருக்கு வருகை தந்த காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லக்குமாருக்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் இந்திய கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி நகருக்கு வருகை தந்த டாக்டர் செல்லக்குமாருக்கு முன்னாள் நகர காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாரக் தலைமையில் சிறப்பான வரவேற்று கொடுக்கப்பட்டது,
பின்னர் ராசு வீதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மற்றும் பழையப்பேட்டையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திரு உருவச்சிலைக்கும் டாக்டர் செல்லக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, வேட்டியம்பட்டியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கார் ஆகிய திரு உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பி. சி. சேகர், பர்கூர் சட்ட மன்றத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுக சுப்பிரமணி, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் விக்னேஷ் பாபு, முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சில் ஜேசுதுரைராஜ், மாவட்ட பொருலாளர் உமர்ஜி, நகர தலைவர் லலித் ஆண்டனி, இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை என்ற துரை சாமி, மாவட்ட செயலாளர் ஹரி, வழக்கறிஞர்கள் குலாபி நபி ஆசாத், ஷபிக் அகமத், மாவட்ட துணைத் தலைவர் ஜெ.வி. வெங்கடேசன், மாவட்ட கலைப் பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, சேவாதள மாவட்ட தலைவர் தேவராஜ், விட்டாரத் தலைவர்கள் சித்தீக் செல்வராஜ்,மீனரணி மாவட்ட தலைவர் செல்வம் , ஊடக பிரிவு கமலகண்ணன், மீனவரணி செல்வம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நூர்முகமது, எஸ், டி. பி. கட்சியின் மாவட்ட மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, முஸ்லிம் லீக் கட்சி பாரூக் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மடத்தானூர் ஆறுமுகம், சத்திவேல்,சுந்தரேசன்,சிவானந்தம், ஏழுமலை, அன்வர், ராமன்,நெடுங்கள் சுப்ரமணி, கருணாமூர்த்தி, ஜெயராமன், சையத் பாஷா, திப்பு சுல்தான்,
சுந்தரேசன், ராமமூர்த்தி, தனஞ்செயன், விவேகானந்தன் உள்ளிட்ட ஏராளமானவர்கள்கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
