கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பளாராக போட்டியிட்டுள்ள டாக்டர் சந்திரமோகன் வேட்புமனு தாக்கல் செய்தார். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பளாராக போட்டியிட்டுள்ள டாக்டர் சந்திரமோகன் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷாஜஹான் அவர்களிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கள் இன்னும் சிலநாட்களில் முடிய உள்ளதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்து வருகின்றனர். இதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களும் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடவுள்ள சமுக ஆர்வலரும், சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான டாக்டர் சந்திரமோகன் இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
இதன் முன்னதாக திருக்கோவிலில் பூஜைகள் செய்து வழிபட்டபின் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவரும் வருவாய் கோட்டாட்சியருமான ஷாஜஹான் அவர்களிடம் டாக்டர் சந்திரமோகன் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
இதனை அடுத்து டாக்டர் சந்திர மோகன் நகர மக்களிடம் தனக்கு வாக்கு சேகரிக்கும் பணியினை மேற்கொண்டார்.

செய்தியாளர்
மாருதி மனோ
