காவேரிப்பட்டினம் அருகே உள்ள சுருளி அள்ளி கிராமத்தில் நடைபெற்ற பொது வினியோகம் திட்ட குறை தீர்க்கும் முகாம் .!

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டினம் அருகே உள்ள சுருளி அள்ளி கிராமத்தில் நடைபெற்ற பொது வினியோகம் திட்ட குறை தீர்க்கும் முகாம் .!

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள சுருளி அள்ளி கிராமத்தில் நடைபெற்ற பொது வினியோகம் திட்ட குறை தீர்க்கும் முகாமினை சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திர மோகன் துவக்கி வைத்தார். இதில் உடனடி தீர்வு காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களின் உத்தரவின்படி பர்கூர், சுருளி அள்ளி , சூளகிரி, ஓசூர் என மாவட்டத்தின் பல்வேறு கிரமங்களில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பொது வினியோகம் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக காவேரிப்பட்டினம் அருகே உள்ள சுருளி அள்ளி கிராமத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் கோகுல்நாத் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திர மோகன் துவக்கி வைத்து பேசுகையில் தமிழக அரசு குடும்ப அட்டைகள் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு மளிகைப்பொருட்களை வழங்கி வருகிறது. இது மட்டுமின்றி  உடல் ஊனமுற்றோருக்கு வீடு தேடி சென்று ரேசன் பொருள்களை வழங்கி வருவது மிகவும் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த சிறப்பு முகாமில் சுருளி அள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டு புதிய குடும்ப அட்டைகள் வேண்டியும், குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கை, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் செய்ய வேண்டி தங்களது மனுக்கள் கொடுத்தவர்களுக்கு உடனடியாக தீர்வுக் காணப்பட்டதால் மக்கள் மகிழ்சியடைந்தனர்.

கிராம மக்கள் பயன் பொறும் வகையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் தனி வருவாய் ஆய்வாளர்கள் சின்னசாமி, கண்ணன், விற்பனையாளர் ராம்குமார், நுகர்வோர் அமைப்பை சேர்ந்த ஜெய்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ