மின்னணு பயிர் கணக்கிடும் பணிகளை வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு.!

கிருஷ்ணகிரி

மின்னணு பயிர் கணக்கிடும் பணிகளை வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்னணு பயிர் கணக்கிடும் பணிகளை வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு முழுவதும் வேளாண்மை துறையில் மூலம் மின்னணு பயிர் கணக்கிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணியின்நோக்கம் துல்லியமான பயிர்களை தரவுகள் சேகரிப்பு அதன் மூலம் அரசு மானியம் திட்டங்களுக்கு தேவையான நீதி ஒதுக்கீடு பேரிடர் நிவாரணங்களுக்கு தேவையான பயிர் காப்பீட்டு இழப்புகளை விரைவாக வழங்குதல், தகுதியான விவசாயிகளுக்கு வங்கி கடன் பெறுவதை எளிமையாக்குதல் போன்ற பயனுள்ள நன்மைகளை விவசாயிகள் பெறும் நோக்கில் ராபி  மற்றும் காரிப் பருவத்திற்கு இந்த டிஜிட்டல் பயிர் கணக்கீடு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது ராபி பருவத்திற்கு மின்னணு பயிர் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து வரும் இப்பணிகளை வேளாண்மை இயக்குனரகம் சென்னையிலிருந்து பணிபுரியும் வேளாண்மை துணை இயக்குனர் அறிவழகன் ஆய்வு செய்தார்
 
இந்த ஆய்வு பணியின் போது அதில் உள்ள இடர்பாடுகள் குறித்து அலுவலர்கள் மற்றும் தன்னார்வாளர்களிடம் கேட்டறிந்து நேரடியாக வயலில் களப்பணியை ஆய்வு செய்ததுடன் பணியில் ஈடுப்பட்டிருந்த பர்கூர் வட்டார தன்னார்வலரிடம் கேட்டறிந்தார். மேலும் இந்த ஆய்வின்போது வேளாண்மை இணைய இயக்குனர் காளிமுத்து, வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தரக்கட்டுபாடு அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் இதுபோன்று மின்னணு பயிர் கணக்கீடு பணி மேற்கொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்கள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அப்பகுதி வேளாண்மை அலுவலர்,உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோரை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று வேளாண்மை இயக்குனரகம் சென்னையிலிருந்து பணிபுரியும் வேளாண்மை துணை இயக்குனர் அறிவழகன் தெரிவித்தார்.

செய்தியாளர் 

மாருதி மனோ