ஒசூர் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகங்களை திறந்து வைத்த முதலமைச்சர். !

கிருஷ்ணகிரி

ஒசூர் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகங்களை திறந்து வைத்த முதலமைச்சர். !

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பாக, போச்சம்பள்ளி சிப்காட் மற்றும் ஒசூர் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகங்களை திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சிப்காட் வளாகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில்,  ஒசூர்  சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், ஒசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.

உடன் ஒசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தையா, ஒசூர் சிப்காட் திட்ட அலுவலர் ராஜ் குமார்  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ