மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நுகர்வோர் குழுக்கூட்டம் நடைபெற்றது,!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நுகர்வோர் குழுக் கூட்டத்தில் தமிழக அரசின் நலத்திட்டங்களை விரைவாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நுகர்வோர் குழுக்கூட்டம் நடைபெற்றது,

வட்டார வளர்ச்சி அலுவலர்களான உமா, செல்லக்கண்ணாள் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மத்தூர் உதவி ஆய்வாளர் பயாஸ், சமுக நலத்துறை விரிவாக்க அலுவலர் அலமேலு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லாவண்யா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலவலர் மாதேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்துக் கொண்டு
மத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இயங்கு நியாய விலைக் கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுவது இல்லை, இதில் அதிகப்படியான ரேசன் அரிசிகள் நிப்பெட் கம்பெனிகளுக்கு கடத்தப்படுவதை குடிமை பொருள் தனி வட்டாசியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் முட்டைகள் வழங்கப்படுவது இல்லை என்ற புகார் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக வரும் பெண்களிடம் பணம் கேட்கும் நிலையை தடுக்க வேண்டும்,
அரசு பள்ளிகளில் இன்னும் கழிப்பிட வசதிகள் இல்லாமல் மாணவ மாணவிகளின் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதை தடுத்திட வேண்டும்,
மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், குறிப்பாக தமிழக அரசின் நலத்திட்டங்களை விரைவாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் அடங்கிய மனுவினை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தின் போது வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் முருகன், உதவியாளர்கள் கண்ணன் மற்றும் திருமதி கீதா, கணேசன், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
