நூலகர் தின விழா மற்றும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் 133 வந்து பிறந்தநாள் விழா  .!

கிருஷ்ணகிரி

நூலகர் தின விழா மற்றும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் 133 வந்து பிறந்தநாள் விழா  .!

நூலகர் தின விழா மற்றும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் 133 வந்து பிறந்தநாள் விழா 

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தினவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு  மாவட்ட நூலக அலுவலர்  திரு.சக்திவேல் தலைமை தாங்கினார். முதல் நிலை நூலகர்  சுப்பிரமணி  வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக வாசகர் வட்டத் தலைவர் கமலேசன்   கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மாவட்ட நூலக சரிபார்ப்பு அலுவலர் முருகேசன் வாசகர் வட்டத் துணைத்தலைவர் செல்வி . கலைச்செல்வி, வாசகர் வட்ட உறுப்பினர்கள் நளினி நாமகிரி, பத்மாவதி, கிருஷ்ணகிரி கம்பன் கழக நிர்வாகிகள் க.அருள் ஸ்ரீரங்கன், பாலாஜி  மற்றும் யோகா ஆசிரியர் வாழ்த்துரை வழங்கினர்.
   
நூலகர் சார்பில் பழனி அம்மாள் திருவாளர்கள்  அசோக்குமார், சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழா நிகழ்வுகளை இரண்டாம் நிலை நூலகர் நந்தகுமார் தொகுத்து வழங்கி,  நன்றியுரை ஆற்றினார்.

நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு அடைந்தது. முன்னதாக டாக்டர் எஸ்.ஆர.அரங்கநாதன் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

செய்தியாளர்

மாருதி மனோ