பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலத்தில் போர் நிறுத்தம் வேண்டி உலக அமைதிக்காக ஜெப வழிபாடு!!

தஞ்சாவூர்

பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலத்தில் போர் நிறுத்தம் வேண்டி உலக அமைதிக்காக ஜெப வழிபாடு!!

பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலத்தில் போர் நிறுத்தம் வேண்டி உலக அமைதிக்காக ஜெப வழிபாடு!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலத்தில் போப் ஆண்டவர் 14ஆம் லியோ அவர்களது அறிவிப்பின்படி போர் நிறுத்தம் வேண்டி உலக அமைதிக்காக 1000மணிகள் பரிசுத்த ஜெபமாலை ஜெபிக்கும் ஜெப வழிபாடு ஆனது பங்குத்தந்தை மரிய பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த தேவாலயத்தில் இயங்கி வரும் பக்த சபையான மரியாயின் சேனையினர் ஒன்று கூடி ஜெபித்தனர். இதனை சபையின் கியூரியா தலைவர் பிலிப் அமல்ராஜ் செயலர் அடைக்கலசாமி துணைத் தலைவர் ராஜு பொருளாளர் ஜெனோவா ஆகியோர் முன்னின்று நடத்தினர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கானியிருப்பு பங்கு தந்தை ஜோசப் அடிகளார் அருட் சகோதரி சில்வியா மார்க்கிரேட் கும்பகோணம் கொமித்சிய தலைவர் ராஜரத்தினம் சென்னை செனாத்தூஸ் முன்னாள் செயலர் மனோகர்,கியூரியா முன்னாள் தலைவி மாசிலாமேரி ஆகியோர் பங்கேற்றனர். இதில் பாபநாசம் ராஜகிரி-பண்டாரவாடை அய்யம்பேட்டை ஒன்பதுவேலி அகரமாங்குடி மாத்தூர் சத்தியமங்கலம் மற்றும் காணியிருப்பு பகுதிகளை சேர்ந்த திரளான பெண்கள் உட்பட 100-ம் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் 

பாபநாசம் இன்பம்