அதிராம்பட்டினத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த வக்ஃப் சொத்துக்கள் மீட்ப்பு.!

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த வக்ஃப் சொத்துக்கள் மீட்ப்பு.!

அதிராம்பட்டினத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த வக்ஃப் சொத்துக்கள் மீட்ப்பு.!

துலுக்காப்பள்ளி டிரஸ்ட்  சார்பாக நவாஸ்கனி எம்.பி -க்கு பாராட்டு.

அதிராம்பட்டினம் ஜன 16

அதிராம்பட்டினம் துலுக்காப்பள்ளிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கடைகள் கட்டிய இடங்களை மீட்டு மீண்டும் பள்ளிக்கு சேர்த்து வருகின்றது அதிராம்பட்டினம் துலுக்காப் பள்ளி ட்ரஸ்ட்.

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில துணைத் தலைவர் கே. நவாஸ்கனி. எம்.பி., தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக 19-09-2024 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரின் முயற்சியினால் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல், தர்ஹா போன்ற வக்ப் சொத்துக்களை பாதுகாத்து பராமரிப்பு செய்ய ஆய்வுகளில் ஈடுபட்டு வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான இடங்களில் யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் அதனை அகற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக அதிராம்பட்டினம் துலுக்காப் பள்ளிக்கு சொந்தமன இடங்களை ஆக்கிரமித்து உள்ள நபர்களிடம்  துலுக்காப் பள்ளிவாசல் முத்தவள்ளி ஹாஜி எம்.எஸ்.ஷிஹாபுத்தீன் தலைமையில் ட்ரஸ்ட் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் குடியிருப்பு வாசிகள் ஒத்துழைப்புடன் அன்பாக பேசி வக்ஃப் சொத்துக்களை மீட்டு பள்ளிக்கு சேர்த்து வருகின்றனர். இதனால் வக்ஃப் சேர்மனுக்கு பள்ளிவாசல் ட்ரஸ்ட் சார்பாக நிர்வாகிகள் பாரட்டு தெரிவித்தனர்.

சாகுல்