வாணியம்பாடியில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கைகள் சாலை மறியல் போராட்டம்..!

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கைகள் சாலை மறியல் போராட்டம்..!

வாணியம்பாடியில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கைகள் சாலை மறியல் போராட்டம். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பைபாஸ் சாலை, தர்ஜிபேட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கன மழை காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் மழை நீர் மற்றும் ஏரியில் இருந்து வெளியேறி வரும் கால்வாய் நீர் ஆகியவை முறையான மழை நீர் கால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது.

இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த 30-க்கு மேற்பட்ட திருநங்கைகள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் படுத்துக்கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீஸார், வருவாய்த்துறை, நகராட்சி துறையினர், திமுக நகர செயலாளர் சாரதி குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திருநங்கைகள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மழைநீர் உடனடியாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.