சந்திப்பை முடித்து கிளம்பிய ஈ பி எஸ், ஒரு நிமிஷம் இருங்க என அமித்ஷா கொடுத்த வார்னிங். !

அதிமுக + பாஜக

சந்திப்பை முடித்து கிளம்பிய ஈ பி எஸ், ஒரு நிமிஷம் இருங்க என அமித்ஷா கொடுத்த வார்னிங். !

இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற சந்திப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் இருந்து சில உறுப்பினர்களும், மூத்த தலைவர்களும் ஆளும் திமுகவிற்கு மாற வாய்ப்புள்ளது என்று அமித் ஷா ஈபிஎஸ்ஸிடம் தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த விவகாரத்தை ஈபிஎஸ் தீவிரமாக எடுத்துக்கொண்டு, இதுபோன்ற அரசியல் இழப்புகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஒரு நேரடி சந்திப்பு அரசியல் அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இரு கட்சிகளுக்கும் இது ஒரு முக்கியமான காலகட்டம். கடந்த சில நாட்களாகவே மீண்டும் அதிமுக உட்கட்சிப் பூசல்களாலும், வலுவான தலைமை இல்லாததாலும் சவால்களைச் சந்தித்து வருகிறது.

பாஜக - அதிமுக கூட்டணி

மறுபுறம், தமிழகத்தில் தங்கள் தளத்தை விரிவாக்க பாஜக முயற்சிக்கிறது. ஆனால், அதிமுகவுடனான அதன் கூட்டணி சுமூகமாக இருந்ததில்லை. எடப்பாடி அமித் ஷாவை சந்தித்துவிட்டு வெளியே செல்லும் முன்.. கொஞ்சம் இருங்கள் என்று கூறிவிட்டு அதன்பின்.. உங்க கட்சியை விட்டு சிலர் போக போறாங்க.. கவனமாக இருங்க என்று அமித் ஷா கூறியதாக தெரிகிறது. இதை கேட்டதும் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டன் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

அமித் ஷா தனது எச்சரிக்கையில் மிக தீவிரமாக இருந்ததாக என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிருப்தியிலுள்ள சில அதிமுக தலைவர்களை திமுக தீவிரமாக அணுகி வருவதாகவும், அவர்கள் கட்சி மாறினால் எதிர்வரும் தேர்தல்களில் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்றும் அவர் ஈபிஎஸ்ஸிடம் கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து திமுக செல்லும் திமிங்கலம்

ஈபிஎஸ் தனது கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைத்து, அதிருப்தியாளர்களைச் சமாதானப்படுத்தி, கட்சி ஒற்றுமையுடன் இருப்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். அதிமுகவின் மற்றொரு முக்கிய புள்ளி விரைவில் திமுகவில் சேர வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பு நிர்வாகிகள் கட்சி மாறுவது வழக்கமான நிகழ்வு. வெற்றிபெறக்கூடிய கட்சியிலும், பெரும்பாலும் ஆளுங்கட்சியிலும் இணைவது பொதுவான போக்கு.

திமுக வட்டாரங்கள் தரும் தகவலின்படி, அந்த முக்கியப் புள்ளி கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்றும், சிலர் அவர் சென்னையைச் சேர்ந்தவர் என்றும் கூறுகின்றனர். அவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததை அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

சுமார் 5,000 பேருடன் இணைந்து அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும், இதற்கான இணைப்பு விழா விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. அவர் மாறும் பட்சத்தில் அதிமுகவின் அடித்தளம் பெரிய அளவில் ஆட்டம் காணும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

5,000 பேருடன் திமுகவில் இணைகிறார்

இந்த நகர்வு அதிமுகவின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிமுகவுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படலாம். அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கட்சி மாறுவது தேர்தலுக்கு முன்பு ஒரு பொதுவான நிகழ்வுதான் என்றாலும், இது கட்சிகளின் பலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

அதிமுகவைச் சேர்ந்த அந்த முக்கியப் பிரமுகர் திமுகவில் இணைவதற்கான காரணம் குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. கட்சியின் கொள்கைகள் மீதான அதிருப்தி, பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் எதிர்ப்பு, பதவி கிடைக்காத விரக்தி, நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்த நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.